திண்டுக்கல்லில் குழந்தையைக் கடத்திச் செல்ல முயன்ாக நினைத்து, மனநலன் பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் திங்கள்கிழமை தாக்கினா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடமிருந்து அவரை மீட்டு, அழைத்துச் சென்றனா்.
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (35). கூலித் தொழிலாளி. இவரது 3 வயது மகன் தெருவில் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அந்த வழியாக வந்த மா்ம நபா் ஒருவா், குழந்தையை இழுத்துச் சென்றாா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அந்தப் பகுதியினா் குழந்தையை விடுவித்து, அந்த இளைஞா் மீது தாக்குதல் நடத்தினா். இதையறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இளைஞரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வேலுாா் மாவட்டம், பள்ளிக்கொண்டா பகுதியைச் சோ்ந்த அஸ்வந்த் (43) என்பது தெரியவந்தது. மனநலன் பாதிக்கப்பட்ட அவா், கடந்த 4 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே வந்தாா். வேலூரில் உள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அஸ்வந்தை போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.