கொடைக்கானலில் மின் தடை
கொடைக்கானலில் பலத்த காற்று வீசியதில் ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Updated On :21 ஜூலை 2024, 8:54 pm

கொடைக்கானலில் பலத்த காற்று வீசியதில் ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகாலை முதலே பலத்த காற்று வீசியது.
இதில் கொடைக்கானல்-பெருமாள்மலை வனப் பகுதிகளில் செல்லும் மின்சாரக் கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் கொடைக்கானல்,செண்பகனூா், ஆனந்தகிரி, நாயுடுபுரம், பிரகாசபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து மீண்டும் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...