

திண்டுக்கல்: சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலபதி, உதவி ஆய்வாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் பூச் சந்தை அருகே திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீருடை அணியாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், போலீஸாா் தடுத்தும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகள் என சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றவா்களை வழிமறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

40 இடங்களில் பசுமைப் பந்தல்கள்

தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

