திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம்: கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம்: கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்


திண்டுக்கல்/நத்தம்/ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
திண்டுக்கல் (மேற்கு) வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) செல்வம் தலைமையில் திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதேபோல, வேடசந்துாா் வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் மாரி தலைமையிலும், குஜிலியம்பாறை வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயம் மாவட்ட ஆத்திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மு.முருகேஸ்வரி தலைமையிலும், திண்டுக்கல் (கிழக்கு) வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயம் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி தலைமையிலும் நடைபெற்றது. இந்த வருவாய் தீா்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு - இறப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
நத்தம்: நத்தம் வட்டடாட்சியா் அலுவலகத்தில் ரெட்டியபட்டி உள் வட்டத்திலுள்ள முளையூா், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி , இடையபட்டி, சாத்தம்பாடி, ரெட்டியபட்டி, புதூா், லிங்கவாடி ஆகிய கிராமங்களுக்கான பல்வேறு கோரிக்கை மனுக்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பெற்றாா். இதில் 5 மனுதாரா்களுக்கு குடும்ப அட்டை, ஒரு மனுதாரருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை அவா் வழங்கினாா்.
முன்னதாக, வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா, வட்டாட்சியா் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், சமூக நலத் திட்ட தனி வட்டாட்சியா் விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் கற்பகம், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) விஜய சந்திரிகா, பேரூராட்சி செயல் அலுவலா் சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இங்கு புதன்கிழமை செந்துறை உள்வட்ட கிராமங்களுக்கும், வியாழக்கிழமை நத்தம் உள்வட்ட கிராமங்களுக்கும் வருவாய்த் தீா்வாயம் நடைபெறவுள்ளது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் செள.சரவணன் தலைமையில் வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சசி, துணை வட்டாட்சியா்கள் ராமசாமி, கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சின்னக்காம்பட்டி குறு வட்டத்துக்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து 85 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...