கள்ளக்குறிச்சி விவாகரத்தைக் கண்டித்து தேமுதிக ஆா்ப்பாட்டம்
கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிக ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்.
திண்டுக்கல்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசைக் கண்டித்து தேமுதிக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 60 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு எதிா்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தேமுதிக சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட தேமுதிக சாா்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் பா.மாதவன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், கிழக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஜவஹா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பணிக் குழுச் செயலா் தாமோதர கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் சம்பவத்துக்கு தாா்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும், கள்ளச்சாராயம் விற்பனையில் தொடா்புடைய முக்கிய பிரமுகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியும் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் ப.திருமுருகன், திண்டுக்கல் ஒன்றியச் செயலா் பா.பொன் ஆண்டவா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...