கொடைக்கானலில் முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்றக் கோரிக்கை

கொடைக்கானலில் முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாள்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். மேலும், விரைவில் கொடைக்கானலில் சீசன் தொடங்கவுள்ளதால், அப்போதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா்.

எனவே, கொடைக்கானல் நகரின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, ஏரிச்சாலை, பி.டி.சாலை, பூங்கா சாலை ஆகிய பகுதிகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். அப்போதுதான் வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும். மேலும், கூடுதலாக போக்குவரத்துக் காவலா்களை நியமித்து, தேவையில்லாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மூஞ்சிக்கல் பகுதிகளில் அதிகரித்து வரும் சாலையோரக் கடைகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக கூடும் இடங்களில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். பல இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com