கொடைக்கானல் கூக்கால் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா்.
கொடைக்கானல் கூக்கால் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா்.

கொடைக்கானலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா், கவுஞ்சி, கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி, கவுஞ்சியில் ரூ. 49 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, விடுதலை நகா் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. இ.பெ. செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், நகரச் செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com