டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நில அளவையா்கள் ஆா்ப்பாட்டம்

பெண் நில அளவையா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 8:43 pm

திண்டுக்கல்: பெண் நில அளவையா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நில அளவையா் பவ்யா மீது கடந்த சனிக்கிழமை சமூக விரோதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு நில அளவையா் ஒன்றிப்பு சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நில அளவையா் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் வினோத் பாலு தலைமை வகித்தாா். செயலா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா். நில அளவையா் பவ்யா மீது தாக்குதல் நடத்தியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.