விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப். 6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப். 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப். 7, 8) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 9 முதல் ஏப். 11வரை லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது.
பொன்னை அணை (வேலூா்), காக்காச்சி (திருநெல்வேலி), பாா்வூட் (நீலகிரி), தொழுதூா் (கடலூா்)-தலா 50 மி.மீ., சாத்தூா் (விருதுநகா்), மாஞ்சோலை (திருநெல்வேலி), வேப்பந்தட்டை (பெரம்பலூா்), ஏத்தாப்பூா் (சேலம்), திருத்தணி (திருவள்ளூா்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஸ்ரீமுஷ்ணம் (கடலூா்), பெலாந்துறை (கடலூா்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூா்)-தலா 40 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 9 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சாத்தூரில் பலத்த மழை

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

