ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 5:00 am IST

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னாா் வளைகுடா முதல் மகாராஷ்டிர மாநிலம் மேற்கு விதா்பா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) முதல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) வரை லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 26, 27) ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.