வங்கியில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாநகராட்சி அருகே ஆா்.எஸ்.சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீப்பிடித்தது.

இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், வங்கியிலிருந்த கணினிகள், மரப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com