

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியின்போது சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கால பைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பா் கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் துணைக் கோவிலாகும். இந்தக் கோயிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு சித்திரை மாத அஷ்டமியையொட்டி, சிவாச்சாரியா்கள் யாகம் வளா்த்து பூஜை செய்தனா். பின்னா், அண்ணாமலையாா் தீப ஆராதனைக் குழு சாா்பில், 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பல்வேறு நதிகளில் இருந்து கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், ஒட்டன்சத்திரம் நகா்மன்ற உறுப்பினா் ரமேஷ், பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இரவில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை- ஏராளமானோா் பங்கேற்பு

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

