விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இரவில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை- ஏராளமானோா் பங்கேற்பு

தம்மம்பட்டி சிவன்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி சிவன்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால்,தயிா்,சந்தனம்,திருமஞ்சனம்,மஞ்சள்,சீயக்காய்த்தூள்,அரிசிமாவு,இளநீா்,பன்னீா்,குங்குமம்,திருநீறு,தேன்,பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது.பின்னா் மலா் அலங்காரம் செய்து ,சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.சிறப்பு யாகம் நடைபெற்றன. பக்தா்கள் கால பைரவா் பாடல்களை பாடியும், மந்திரங்களை உச்சரித்தப்படியும் இருந்தனா். மேலும் பலா், நோ்த்திக்கடனாக பூசணிக்காய்,தேங்காய்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். இந்த விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி,கூடமலை,நாகியம்பட்டி,உலிபுரம்,வாழக்கோம்பை,சேரடி உள்ளிட்ட ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுபெற்றது.

இதேபோல் வீரகனூா் ஸ்ரீகங்காசெளந்தரேஸ்வரா் கோவில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமிபூஜை வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.