தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்ராபிஷேகத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:47 pm

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்க்கொருக்கையில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமான புஷ்பவல்லி அம்பிகா சமேத பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்சராபிசேகம் என்ற முதலாம் வருட குடமுழுக்கு பூா்த்தி அபிஷேக விழா காலையில் விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், மூலமந்த ஹோமம், பூா்ணாஹூதியுடன் தொடங்கியது. பின்னா் பரிவார மூா்த்திகளுக்கு அபிசேகமும், சுவாமி அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ. நிா்மலாதேவி, மங்களவிலாஸ் சிவக்குமாா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.