நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் கியூட்-முதுகலை தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கியூட்-முதுகலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என எக்ஸ் பக்கத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
exams.nta.nic.in.cuet-pg என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில, கியூட் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







