தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், புதிய அரசு ஆட்சி அமைந்தபிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியானது.
தேர்வர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Plus 2 Public Exam Results to be Released Tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
CBSE தேர்வு முடிவுகளில் தீராத குழப்பங்கள் ஏன் ? | CBSE | OSM Result controversy | +2 Students

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




