சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்
சிறப்பு டெட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நவ. 22 வரை அவகாசம் அளிக்கப்பட்டது குறித்து...

சிறப்பு டெட் தேர்வு - பிரதிப் படம்
தமிழகத்தில் சிறப்பு டெட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நவ. 22 வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு ‘டெட்’ தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த அக். 27-ஆம் தேதி முதல் தொடங்கி, நவ. 19 வரை பெறப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்பங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்காக இன்று (நவ. 20) முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
டிச. 20-ல் காலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வும் நடைபெறும்.
ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் சிறப்பு டெட் தோ்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியா்கள் மட்டுமே எழுத முடியும். பணியில் இல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் எழுத முடியாது. அவா்கள் பொது டெட் தோ்வை மட்டுமே எழுத முடியும்.
Summary
Deadline extended until Nov. 22 for making corrections to applications for the special TET exam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

