தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:58 pm IST

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு முதல்வரும் திமுக தலைவரமான மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "என்னுயிர் மக்களே! நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் எழுதப்போகும் நாள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களுக்குத் தெரியும். எது உண்மை? எது பொய்? எது நடிப்பு? எது உழைப்பு? யார் நரி? யார் சிங்கம்? அடிமைத்தனம் எது? தைரியம் எது? அனைத்துமே உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. என்னை நம்பி இந்த நாட்டை ஆள என்னிடம் கொடுத்தீர்கள். ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ துறைகளில், தமிழ்நாட்டை முதலிடத்திற்கு நாம் ஒன்றாகக் கொண்டு வந்திருக்கிறோம். நாம் வீழ்த்திய எதிரிகளின் சதிகளை எண்ண ஆரம்பித்தால், அதற்குள்ளாக தேர்தல் முடிவே வந்துவிடும். நம்முடைய திட்டங்களை, அதனால் விளைந்த நன்மைகளை நான் பட்டியலிட ஆரம்பித்தால், அடுத்த தேர்தலே வந்துவிடும்.

எனக்கு நீங்கள் கொடுத்த கடமையை என்னால் முடிந்த வரைக்கும் சரிவரச் செய்துவிட்டேன். உங்களுடைய கடமையை நீங்களும் சரிவரச் செய்ய வேண்டும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதுவரை யாரும் காணாத ஒரு பெரிய கனவோடு காத்திருக்கிறேன். இனி நம்முடைய போட்டி தில்லியுடன் மட்டும் இருக்காது. தெற்கு ஆசியாவில் அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவேன். மண், மொழி, மானம் மூன்றையும் காப்பாற்ற மூச்சு இருக்கும் வரைக்கும் போராடுவேன்.

வாக்களிப்பீர், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு!

தமிழ்நாடு வாக்களிக்கும்! தமிழ்நாடு வெல்லும்!

என்றும் உங்களில் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!"

என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The day that will write the future of Tamil Nadu: Chief Minister MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.