செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வாக்குப்பதிவு நாளில் சென்னையில் வெய்யில் கொளுத்தும்! எச்சரிக்கை

நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம் என எச்சரிக்கை விடுப்பு..

News image

வாக்குப்பதிவு - file photo

Updated On :22 ஏப்ரல் 2026, 4:28 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், சென்னையில் வெய்யில் 40 டிகிரி செல்சியஸ் போல கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வாக்காளர்கள் அதற்கேற்ப வாக்களிப்பதை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாளை சென்னையில் வெய்யில் மற்றும் புழுக்கம் அதிகமாக காணப்படலாம். எனவே, வாக்காளர்கள் வரிசையில் அதிக நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு ஏற்ப தயாராக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதாவது, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் வெப்பம் அதிகமாக இருக்கும்.

வாக்களிக்க 10 மணிக்கு மேல் வாக்குச்சாவடி செல்வோர் கையில் தொப்பி, குடை மற்றும் கண்கண்ணாடி கொணடு செல்வது நல்லது.

தண்ணீர் பாட்டில் நிச்சயம் எடுத்துச் செல்லவும். உடல்நிலை சற்று களைப்பாக இருப்பவர்கள் ஓஆர்எஸ் மருந்து கலந்த தண்ணீரை எடுத்துச் செல்லலாம்.

வயதான மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது நிச்சயம் உடன் ஒருவரை உதவிக்கு அழைத்துச் செல்லவும்.

வாக்குச்சாவடிகளில் முதியவர்களுக்கான வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வாக்களிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பகல் நேர வெப்பநிலையானது நாளை 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். காற்றில் ஈரப்பதமானது கடற்கரைப் பகுதிகளில் 60 - 80 சதவிகிதம் என்ற அளவில் இருந்தால் அது வெப்பநிலையை 40 சதவிகிதம் முதல் 41 சதவிகிதம் வரை உணர வைக்கும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களை விட வெப்பம் கடுமையாக இருக்கும். கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்வோர், காலை 10 மணிக்குள் சென்று வாக்களிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.