புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!

சென்னை அடுத்த தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து...

Traffic Congestion in Tambaram

கோப்புப் படம்

Published On :

சென்னை அடுத்த தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான பணிகள் தேர்தல் ஆணையம் சார்பில் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன.

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டு, முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்கள் வாக்களிக்க வசதியாக சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் புறநகர்ப்பேருந்து நிலையம் என 4 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், சென்னை தாம்பரம் - கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருப்போருர் - செங்கல்பட்டு வெளிவட்ட சாலையை பயன்படுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Traffic Congestion in Tambaram Advice to Use Alternate Routes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.