தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்படுவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் மீறல் நடக்காமலிருப்பதையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியம் பூசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது.
பொத்தான்களில் வாசனைத் திரவியம் பூசுவதன் மூலம், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார்.
இந்தப் புகாரையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்களில் வாசனைத் திரவியம் தடவப்பட்டிருந்தால், அது வாக்கு ரகசியத்தை பாதிக்கும் செயல் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், வாசனைத் திரவியங்களைப் பூசுவதால், இயந்திரங்களைப் சிதைக்கும் செயலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, தேவைப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, புகாரையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டிருக்கிறதா என்பதை தீவிரமாக பரிசோதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
TN Polls 2026: EC warns putting perfume, ink or glue on EVM buttons to track votes is electoral tampering
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்!

திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை! என்ன நடந்தது?

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


