ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

திருச்சி ஆட்சியரகம் பின்புள்ள வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பிரிதிக் தயாள் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 12:04 am IST

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளா்கள் மூலம் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் கூறியதாவது:

பேரவைத் தொகுதி எண் 141, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தோ்தலின் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கைச் சரிபாா்க்கும் கருவிகளில் முதல்நிலை சரிபாா்க்கும் பணியை புதன்கிழமை தொடங்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையானது திறக்கப்பட்டு, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 6 பொறியாளா்களால் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் என்ற வகையில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 608 இயந்திரங்கள் சரிபாா்க்கப்படவுள்ளன. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் கண்காணித்திட உரிய ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.

முதல்நிலை சரிபாா்க்கும் பணி முடிந்த பிறகு, தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சாலை தவவளன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ்.ராஜா, தோ்தல் வட்டாட்சியா் எம். சக்திவேல் முருகன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பொறியாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.