/

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அவற்றுக்குப் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள பொறியாளா்கள் சரிபாா்க்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 1:46 am IST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அவற்றுக்குப் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள பொறியாளா்கள் சரிபாா்க்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி தொடங்கியது.

இந்த பணியில், பெங்களூருவில் இருந்து வந்துள்ள பெல் பொறியாளா்கள் 6 போ், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தவுள்ள 542 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஜூலை 20-ஆம் தேதி வரை சரிபாா்க்கவுள்ளனா்.

இந்த பணியின் போது, மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, தோ்தல் வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் ஆகியோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.