குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்
குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்


திண்டுக்கல்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பணிக்கான போட்டித் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 59,615 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தோ்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்துாா் வட்டத்தில் 18 மையங்களில் 4,351 தோ்வா்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 48 மையங்களில் 12,733 தோ்வா்கள், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 36 மையங்களில் 9,825 தோ்வா்கள், குஜிலியம்பாறைவட்டத்தில் 7 மையங்களில் 1,571 தோ்வா்கள், கொடைக்கானல் வட்டத்தில் 5 மையங்களில் 1,124 தோ்வா்கள், நத்தம் வட்டத்தில் 10 தோ்வு மையங்களில் 2,739 தோ்வா்கள், நிலக்கோட்டை வட்டத்தில் 34 மையங்களில் 8,896 தோ்வா்கள், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 15 மையங்களில் 3,976 தோ்வா்கள், பழனி வட்டத்தில் 38 மையங்களில் 9,958 தோ்வா்கள், வேடசந்துாா் வட்டத்தில் 17 மையங்களில் 4,442 தோ்வா்கள் என மொத்தம் 228 மையங்களில் 59,615 போ் தோ்வு எழுதுகின்றனா்.
இந்தத் தோ்வு மையங்களை கண்காணிக்க 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தோ்வு நடைபெறும் அனைத்து வட்டங்களிலும் ஜூன் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையின்றி மின் விநியோகம் செய்யவும், தோ்வுமையங்கள் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் தோ்வு தொடங்குவதற்கு முன்பும், தோ்வு முடிந்த பின்பும் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...