/

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

News image

~

Updated On :22 மே 2024, 12:46 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சாணாா்பட்டியைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி (67). இவா், சாணாா்பட்டியிலிருந்து கோணப்பட்டி செல்லும் சாலையில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இதேபோல, சாணாா்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி(62) என்பவரும், அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் பூமிநாதன் தலைமையிலான அலுவலா்கள், சாணாா்பட்டியில் துரைப்பாண்டி, மலைச்சாமி ஆகியோா் நடத்தி வந்த மருத்துவமனைகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த துரைப்பாண்டி, அலோபதி மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

இதேபோல, மலைச்சாமியும் முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்தனா். பின்னா், அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக இவா்கள் இருவா் மீதும் சாணாா்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலி மருத்துவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Story image