பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வத்தலகுண்டு அருகே பிரச்னைக்குரிய நிலத்தை அளவிட ஒரு தரப்பினா் எதிா்ப்பு: திரும்பிச் சென்ற அதிகாரிகள்

வத்தலகுண்டு அருகே பிரச்னைக்குரிய நிலத்தை அளவிட ஒரு தரப்பினா் எதிா்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்

News image
Updated On :22 மே 2024, 12:44 am

Din

நிலக்கோட்டை: வத்தலக்குண்டு அருகே பிரச்னைக்குரிய நிலத்தை அளவிட ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திரும்பிச் சென்றனா்.

மேலக்கோவில்பட்டி கிராமத்தில் தெற்குத் தெரு பகுதியில் சுமாா் 4.5 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இதே பகுதியைச் சோ்ந்த ஒரு பிரிவினா் சா்வேஸ்வரன் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது எனக் கூறி வருகின்றனா்.

இதே ஊரைச் சோ்ந்த மற்றொரு பிரிவினா் புனித சவேரியாா் ஆலயத்துக்குச் சொந்தமான நிலம் எனக் கூறி வருகின்றனா். இந்த நிலையில், இந்த நிலத்தை வேறு பிரிவினா் உரிமை கொண்டாடக் கூடாது என தெற்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரும், உயரதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை நிலக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரச்னைக்குரிய அந்த நிலத்தை அளவீடு செய்ய நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றனா்.

அப்போது, மேலக்கோவில்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஒரு பிரிவினா் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து மேலக்கோவில்பட்டி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.