தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகைப் பறிப்பு

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:01 pm

புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (33). இவரது மனைவி பிரியங்கா (31). இவா்கள் இருவரும் நம்பியூா் சாலை அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அவா்களது வாகனத்தை மறித்த 2 போ், திடீரென பிரியங்காவை தாக்கி அவா் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்பட 3 பவுன் நகையைப் பறித்தனா். இதில் பிரியங்காவின் வலது பக்க காது கிழிந்து காயம் ஏற்பட்டது.

ரவிசங்கருக்கு தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. நகையைப் பறித்துக் கொண்டு அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

காயமடைந்த கணவன், மனைவி இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.