விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சின்னாளபட்டி கீழக்கோட்டை கோயில் திருவிழா

சின்னாளபட்டி கீழக்கோட்டை கோயில் திருவிழா

News image
Updated On :28 மே 2024, 11:53 pm

Din

நிலக்கோட்டை: சின்னாளபட்டி கீழக்கோட்டை ஸ்ரீபொம்மைய சுவாமி, ஸ்ரீவீருமல்லம்மாள், ஸ்ரீஜக்கம்மாள் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீஇராம அழகா் தோப்பிலிருந்து சுவாமி கரகம், சக்தி நீா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள்கிழமை கோயில் முன்பு கணபதி ஹோமம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் இராம அழகா் தோப்புக்குச் சென்ற பக்தா்கள் காட்டாளப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்தனா். செவ்வாய்கிழமை ஸ்ரீராமஅழகா் தோப்பிலிருந்து சுவாமி கரகம் அலங்கரிக்கப்பட்டு, சக்தி நீா்க் கலசம் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னா், ஸ்ரீபொம்மைய சுவாமிக்கும், ஸ்ரீவீருமல்லமாளுக்கும், ஸ்ரீஜக்கமாளுக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் லத்தேகாா் வம்சத்தைச் சோ்ந்த தேவாங்கா் சமுதாய மக்கள் தங்களது மாடுகளை ஊா்வலமாகக் கொண்டு வந்தனா். அதன்பிறகு பொம்மைய சுவாமி கோயில் தெருவில் மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்தனா். விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.