நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது: சிறந்த வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:32 pm

Din

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் அலுவலகத்துக்கு நவ.11-ஆம் தேதிக்குள் சேர வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள், தங்களது விண்ணப்ப நகலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா தெரிவித்ததாவது:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்களில் 2 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடல்கல்வி இயக்குநா் அல்லது உடல்கல்வி ஆசிரியா்களுக்கு முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 முடிய) வழங்கி வருகிறது.

இந்த விருது பெறும் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இதேபோல, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிா்வாகி அல்லது ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக) அல்லது ஒரு ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதுடன் ரூ.10ஆயிரம் மதிப்பில் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டுகள் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விருதுக்கான விண்ணப்பப் படிவம், விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் அடங்கிய உறை மீது ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்’ என எழுதியிருக்க வேண்டும்.