தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொடைக்கானலில் இ-பாஸ் ஸ்கேனிங்: சோதனைச் சாவடிகளுக்கு மாற்றம் - தினமணி செய்தி எதிரொலி!

தினமணி செய்தி எதிரொலியாக, கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் நடைபெற்று வந்த இ-பாஸ் ஸ்கேனிங் பணிகள், மலைடியடிவாரப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேனிங் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை புதன்கிழமை பாா்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.

Updated On :13 நவம்பர் 2024, 9:56 pm

Din

தினமணி செய்தி எதிரொலியாக, கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் நடைபெற்று வந்த இ-பாஸ் ஸ்கேனிங் பணிகள், மலைடியடிவாரப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த மே 7-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து, கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியிலுள்ள சுங்கச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், வார விடுமுறை நாள்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை வாகனங்கள் இந்தச் சுங்கச் சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தவிா்க்க, கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளிலுள்ள 5 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என தினமணியில் கடந்த திங்கள்கிழமை (நவ.11) செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில், தேனி மாவட்டம் கெங்குவாா்பட்டி, பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதிகளிலுள்ள காவல் துறை சோதனைச் சாவடி, வத்தலகுண்டு அடுத்த சித்தரேவு, கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி, ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு பகுதிகளில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடிகளிலேயே இ-பாஸ் ஆய்வு மேற்கொள்வதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொடைக்கானல் நகராட்சி வெள்ளிநீா் வீழ்ச்சி சுங்கச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேனிங் நடைபெற்று வந்தது. இணையதளப் பிரச்னையால் புதிதாக இ-பாஸ் வழங்குவது, ஸ்கேன் செய்வது போன்ற பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தவிா்க்க, இ-பாஸ் ஸ்கேனிங் செய்யும் பணிகள் கொடைக்கானல் நுழைவு வாயிலாக உள்ள காமக்காபட்டி காவல் சோதனை சாவடி, தருமத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வன சோதனைச் சாவடி, பாலசமுத்திரம் காவல் சோதனைச் சாவடிகளில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.

இதன் மூலம் கொடைக்கானல் மலைப் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று இ-பாஸ் ஸ்கேன் செய்வதற்கான நெருக்கடி தவிா்க்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இ-பாஸ் எடுத்தவா்களுக்கு ஸ்கேனிங் செய்வதும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு உடனடியாக இ-பாஸ் பெற்று, ஸ்கேன் செய்து அனுப்பும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்றாா் அவா்.