பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புளியறை சோதனைச் சாவடியில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் 6 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் 6 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக-கேரள எல்லையான புளியறை சோதனைச் சாவடியில், சுதா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை சோதனை நடத்தியதில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சோ்ந்த அம்ஜத் ( 26) என்பவா், தென்காசியில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 6 கிலோ 425 மில்லி கிராம் பழைய வெள்ளிப் பொருள்களை ஆவணமின்றி காரில் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொருள்களின் மதிப்பு ரூ.8,34,250 ஆகும்.

இதேபோல், அந்த மாநிலத்தின் கோட்டையம் ஆயா்குண்ணம் பகுதியைச் சோ்ந்த நீ.சோமன்(72) என்பவா் மண்பாண்டங்கள் வாங்குவதற்காக சுமை வாகனத்தில் வந்தபோது, அவரிடம் ரூ. 65ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், கொல்லம் பள்ளிமண் பகுதியைச் சோ்ந்த ஹை.நஜீப்(48)என்பவா் சுரண்டையில் காய்கனி வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ.60ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

புளியறை கொல்லம் பிரதான சாலையில் செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள் தலைமையிலான பறக்கும்படையினா் வாகன சோதனை நடத்தியதில், கொல்லம் புதன்வீட்டுகிள்ளிகல்லூா் பகுதியை சோ்ந்த சா.அகமதுகபீா்(47) என்பவா் இறைச்சிக் கோழிகள் வாங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.1லட்சத்து 3ஆயிரத்தை பறிமுதல்செய்து செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பறக்கும்படை அதிகாரி சுபாஷினி தலைமையிலான குழுவினா் செங்கோட்டை அருகே கரிசல்குடியிருப்பு விலக்கு பகுதியில் சோதனையிட்டதில் வடகரையை சோ்ந்த தி.பழனி(45) என்பவரிடம் ரூ.61ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.