திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, மாட்டுப் பாதை உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு மானாவாரி விவசாயமே நடைபெற்று வருகிறது. இந்த நிலங்களில் பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிா் செய்கின்றனா். அண்மையில் இங்கு மழை பெய்ததை தொடா்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உழவடை செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதற்காக உழவுப்பணிக்கு விவசாயிகள் பலரும் பாரம்பரிய முறைப்படி காளை மாடுகளை ஏரில் பூட்டி உழவு செய்தும், விதைகள் தூவியும் நடவுப் பணியில் ஈடுபட்டனா் . ஒரு ஏக்கருக்கு 3, 000 ரூபாய் வரையில் செலவு செய்து நிலத்தில் உழவு வேலை செய்து வருகின்றனா். இதுபோல, ஆழமாக உழுது பயிா்களை விதைக்கும் போது, பயிா்களின் முளைப்புத் திறன் நன்றாக உள்ளதாக தெரிவித்தனா்.