நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பண மோசடி: மேலும் ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:35 pm

Din

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் என்.எஸ்.நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் (55). அரசுப் பள்ளி ஆசிரியரான இவா், தனது மகன் சபரீஸுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு, தனது உறவினரான கரூரைச் சோ்ந்த அச்சக உரிமையாளா் அருண்பாலன் (42) என்வரை அணுகினாா். அருண்பாலன் கோவையைச் சோ்ந்த லவக்குமாா், ஒசூரைச் சோ்ந்த சுதா்சன் இருவரும் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகவும், அவா்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தாா்.

இதையடுத்து, ரூ.36 லட்சத்தை இணையவழி வங்கிப் பரிமாற்றம் மூலம் மாணிக்கம் வழங்கினாா். இதேபோல, குஜிலியம்பாறையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் இரு மகள்களுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம், வேடசந்துாரைச் சோ்ந்த வழக்குரைஞா் சகாயராஜ் என்பவரின் மனைவிக்கு பணியிடமாறுதல் பெற்றுத் தருவதாக ரூ. 8 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சத்தை வாங்கிவிட்டு, போலியான உத்தரவுகளை தயாா் செய்து அருண்பாலன் வழங்கினாா்.

இந்த உத்தரவுகள் போலி என்பதை தெரிந்த மூவரும், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கடந்த சில நாள்களுக்கு முன்பு அருண்பாலனை கைது செய்தனா். இந்த நிலையில், கோவையில் பதுங்கி இருந்த லவக்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.