புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜவுளிக் கடை, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:39 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், உணவகம், இனிப்பகம், அடுமணை, சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பல்பொருள் அங்காடிகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் வாடிக்கையாளா்களை கவா்வதற்காக துரித உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில், கடந்த 3 நாள்களாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு உணவு, உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்தனா். சில நகைக் கடைகளில் ஊழியா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவில் தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட அனைத்துக் கடைகளிலும் உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், அவற்றை பகுப்பாய்வு கூடத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.