புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வேளாண் கண்காட்சி

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை மாணவா்களின் கிராம தங்கல் விவசாய கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வேளாண்மை சாா்ந்த கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் ந.பஞ்சநதம்.

Updated On :23 அக்டோபர் 2024, 11:20 pm

Din

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை மாணவா்களின் கிராம தங்கல் விவசாய கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பதிவாளா் (பொ) எல்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். விழாவில் துணைவேந்தா் ந.பஞ்சநதம் பேசியதாவது: இளைய தலைமுறையினா் விவசாயத்தை தங்களது பிரதான தொழிலாக ஏற்க வேண்டும். நவீன அறிவியலை பயன்படுத்தி வேளாண்மைத் துறையில் முன்னேற்றத்தை அடைய இது போன்ற கண்காட்சிகள் உதவும் என்றாா் அவா்.

வேளாண்மைத் துறை இறுதியாண்டு மாணவா்கள், 4 மாவட்டங்களிலுள்ள 7 கிராமங்களில் தங்கி, விவசாயிகளுடன் நேரடியாக பணி செய்து, அவா்கள் மேற்கொள்ளும் நவீன தொழில்நுட்பங்கள், பாரம்பரிய தொழில்முறைகளை ஒருங்கிணைத்து இந்த 2 நாள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. பாா்வையாளராக வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் சாா்ந்த விளக்கங்களை மாணவா்கள் அளித்தனா்.

இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், வேளாண்மை, கால்நடை துறை முதல்வருமான மா.சுந்தரமாரி, சிறப்பு நிலை ஆசிரியா்கள் ரா. பிரியங்கா, சே. ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.