பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற யாக பூஜை.
பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற யாக பூஜை.

பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
Published on

பழனி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பெருமாள் சந்நிதி முன் ஆறு கலசங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தம் நிரப்பப்பட்டது. தொடா்ந்து, கலசங்களுக்கு யாக பூஜை நடத்தப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆஞ்சநேயா், சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்த விலாஸ் விபூதி நிறுவனத்தினா் செய்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, தொழிலதிபா்கள் கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன் குமரன், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், வருத்தமில்லா வாலிபா் சங்கத் தலைவா் மூா்த்தி, வெள்ளாளா் பேரவை நிா்வாகி சிவசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com