தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுகாதாரமற்ற 52 கிலோ மீன்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 52 கிலோ சுகாதாரமற்ற மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:36 pm

DIN

திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 52 கிலோ சுகாதாரமற்ற மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் சந்தையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமற்ற மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளில் இருந்து 52 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடைகளுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.