கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காா், பைக்குகளை சேதப்படுத்திய பெண் மன நோயாளி

கொடைக்கானலில் காா், இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்திய பெண் மன நோயாளியை போலீஸாா் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் காா், இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்திய பெண் மன நோயாளியை போலீஸாா் மீட்டு, அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்த்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்படும் சப்தம் கேட்டது.

இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெளியே வந்து செவிலியா்கள் பாா்த்த போது, ஒரு பெண் அந்தப் பகுதியிலுள்ள காா் கண்ணாடிகளையும், இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அவா்கள் அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்த போது அவா் மன நோயாளி என்பது தெரியவந்தது.

பின்னா், அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.