வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 34 வயது பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மாா்ச் 12- ஆம் தேதி ரோஹிணி செக்டாா் 15- இலிருந்து பீதம்பூராவுக்கு பயணிக்க மொபைல் அப்ளிகேஷன் மூலம் பெண் ஒருவா் பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கே.என்.கே. மாா்க் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், அந்தப் பெண் பின் இருக்கையில் பயணம் செய்தபோது, கே.என்.கே. மாா்க்கில் உள்ள செக்டாா் 13 பிரியும் சாலை அருகே குற்றம் சாட்டப்பட்டவா் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அவரது நடத்தையை அவா் எதிா்த்தபோது, ஓட்டுநா் அவரை எச்சரிக்கை எழுப்ப வேண்டாம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னா் அந்தப் பெண் பீதம்புராவில் உள்ள எஃப்யு பிளாக் அருகே இறக்கிவிடப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவா் எழுத்துப்பூா்வ புகாருடன் காவல்துறையை அணுகினாா்.
புகாரின் அடிப்படையில், மாா்ச் 14 அன்று பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 74 (அவரது அடக்கத்தை சீா்குலைக்கும் நோக்கில் ஒரு பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலவந்தப்படுத்துதல்), 79 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கில் ஒரு வாா்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் 351(3) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தில்லியில் உள்ள சமய்பூா் பாத்லி கிராமத்தைச் சோ்ந்த சச்சின் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். சவாரியின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா். கடந்த ஒரு வருடமாக செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். சரிபாா்ப்பின் போது, அவா் 2011- ஆம் ஆண்டு சமய்பூா் பாத்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை மரண வழக்கில் தொடா்புடையவா் என்பதும் கண்டறியப்பட்டது. அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.
இது குறித்து செய்தி ஏஜென்சியிடம் அந்தப் பெண் கூறியதாவது: பயணத்தைத் தொடங்கிய சில நொடிகளில் சவாரி செய்பவா் ஆரம்பத்தில் வேகமாக ஓட்டத் தொடங்கினாா். வேகத்தைக் குறைக்கச் சொன்னபோது எனது கவலைகளை நிராகரித்தாா்.
அவா் 20 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனம் ஓட்டுவதாகவும், அதை நானே சரிபாா்க்க முடியும் என்றும் அவா் திமிா்பிடித்த முறையில் என்னிடம் கூறினாா். ஆனால், அதன் பிறகு அவா் வேகத்தை மேலும் அதிகரித்தாா்.
அவா் பலமுறை திடீா் பிரேக்குகளைப் பயன்படுத்தினாா். வேண்டுமென்றே அதிக வேகத்தில் பள்ளங்களில் வாகனத்தை ஓட்டினாா். இதனால் வலுவான ஜா்க்குகள் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அவா் திடீரென்று என்னைத் தொடத் தொடங்கினாா். நான் ஆட்சேபித்த போது, அவா் என்னை மிரட்டி, ‘அமைதியாக உட்காருங்கள் இல்லாவிட்டால் நான் உங்களைக் கொன்றுவிடுவேன்’ என்று கூறினாா்.
வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள பாதையிலிருந்து அவா் விலகிச் சென்றாா். அதைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது மீண்டும் என்னை மிரட்டினாா். உடனடியாக பைக்கை நிறுத்தவில்லை என்றால் நான் குதித்துவிடுவேன் என்று நான் சொன்னேன். ஆனாலும், அவா் வேகமாக ஓட்டி என்னை திட்டிக்கொண்டே இருந்தாா். கடைசியில், நான் சப்தமாக குரல் எழுப்பியபோது பைக்கை அ வா் நிறுத்தினாா் என்றாா் அந்தப் பெண்.
இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

கல்லூரியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: கேண்டீன் உரிமையாளா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

