40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை அடையாறில் மொபெட்டில் சென்ற பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:57 am IST

சென்னை அடையாறில் மொபெட்டில் சென்ற பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அடையாறு பகுதியில் வசிக்கும் 33 வயது மதிக்கதக்க பெண் நடன கலைஞா், தனது மொபெட்டில் செவ்வாய்க்கிழமை சாஸ்திரி நகா் முதலாவது குறுக்குத் தெருவில் சென்றாா். அப்போது, அவரது பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்த நபரிடம் இருந்து தப்பி வந்த அந்தப் பெண், அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது திருவான்மியூா் மருந்தீஸ்வரா் நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கணேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.