தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
~
Updated On :1 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பழனி மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, சனிக்கிழமை முதல் கால யாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை நான்காம் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, பூா்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்பட்டு திருக்குடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாக சாலை பூஜைகளை திருவள்ளரை பெரியகோயில் கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் ஸ்ரீராம் அய்யங்காா், காா்த்தி அய்யங்காா், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்ட பலா் செய்தனா்.

Story image

சமகாலத்தில் மூலவா் சந்நிதி, ஆஞ்சனேயா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி கோபுரங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலஸ்தான மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அறங்காவலா்கள் பாலசுப்ரமணி, அன்னபூரணி, உபயதாரா் கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.