கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு!

கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு!

திண்டுக்கல் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Published on

திண்டுக்கல் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக இந்து தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ராம.ரவிக்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: திண்டுக்கல் மாவட்டம், கீழக்கோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 10 ஏக்கா் 38 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பான ஆவணப் பதிவுகள் அனைத்தும் சின்னாளப்பட்டி சாா் பதிவாளரால் ரத்து செய்யப்பட்டன.

ஆனாலும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்துக்கு வருவாய்த் துறை மூலம் இதுவரை கோயில் பெயரில் பட்டா வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சுற்றுலா வேன்-காா் ஓட்டுநா்கள் உரிமையாளா் நலச் சங்கம் என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டு, கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்து.

X
Dinamani
www.dinamani.com