மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கலைவாணா் என்எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்

கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் 117-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் 117-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் மாநிலத் தலைவா் எஸ். சகாயசெல்வராஜ் தலைமை வகித்தாா். காந்தி கிராம கிராமியப் பல்கலை. பேராசிரியா் பாலசுந்தரி, அருளானந்தா் கல்லூரி பேராசிரியா் சேரிவாணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், நாடக நடிகா்கள் சங்கம், நேசா அறக்கட்டளை, நாளந்தா கலைப் பண்பாட்டு மையம், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் கலைவாணா் என்எஸ். கிருஷ்ணனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.