கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரிப்பு! காவல் நிலையம் அமைத்து தடுக்க வலியுறுத்தல்!

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் நிலையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் நிலையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியா் பாபு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான கிளாவரை, பூண்டி, பழம்புத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து கீழ்மலைப் பகுதிகளான பாச்சலூா், பன்றிமலை, சோலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.

தாண்டிக்குடியில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசு கிளை நூலகம், தோட்டக் கலைத் துறை அலுவலகம், மின் வாரியம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும். கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்க வேண்டும். கூக்கால், மன்னவனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்குகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். வன விலங்குகளால் மனிதா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல் நிலையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

இதில் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனா். கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.