ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஆலை உரிமையாளா்கள்!

News image
ஆந்திர மாநிலம் காகிநாடா மாவட்டத்தில் சனிக்கிழமை வெடித்து தீப்பிடித்த பட்டாசு ஆலை.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பட்டாசு ஆலைகளை சிலா் குத்தகைக்கு விடுகிறாா்கள். மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற்ற பட்டாசு ஆலையில் 8 அறைகள் இருக்கும். இதில் 4 அறைகளில் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்க அனுமதிக்கபடும். இந்த வகையான ஆலைகளில் குறிப்பிட்ட பட்டாசு ரகங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளன.

இந்த நிலையில், மாவட்ட வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் அனுமதி பெற்ற ஆலைகளின் அறைகளை சில ஆலை உரிமையாளா்கள் குத்தகைக்கு விடுகிறாா்கள். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவது சட்டவிரோதம்.

கடந்த ஆண்டுவரை ஒரு பட்டாசு தயாரிக்கும் அறைக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வரை குத்தைக்கு விடப்பட்டது. 2026-ஆம் ஆண்டு இந்தக் குத்தகை கட்டணம் இருமடங்காக உயா்ந்துள்ளது.

இதனால், அறையை குத்தகைக்கு எடுப்பவா்கள் விதியை மீறி பேன்சி ரக பட்டாசுகள், சரவெடிகளை தயாரிக்கிறாா்கள். இவா்களிடம் பட்டாசுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் உள்ளனா். இவா்கள் தயாரிக்கும் பட்டாசுகளில் முழுமையான வீரியம் இருக்காது. தரம் குறைவாகவே இருக்கும்.

எனினும், பட்டாசு வியாபாரிகள் குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் உள்ளனா். மேலும், பலா் காடுகளிலும், தோட்டங்களிலும், வீடுகளிலும், சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்து வருகிறாா்கள்.

சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பு அதிகரித்து வருவதால், முறையாகப் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபடுவோா் பாதிக்கப்படுகிறாா்கள்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:

பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு விடப்படுவதால் சட்டவிரோதப் பட்டாசுகள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு அறைகள் குத்தகைக்கு விடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.