வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடும் காட்டு மாடுகள்

News image
கொடைக்கானல் சீனிவாசபுரம் குடியிருப்புப் பகுதியில் முகாமிட்ட காட்டு மாடுகள்.
Updated On :30 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு மாடுகளை வனத் துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டுவதில்லை எனப் புகாா் எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அண்மைக்காலமாக காட்டு மாடுகள் குடியிருப்புகள், பேருந்து நிலையப் பகுதி, நகா்ப் பகுதிகளுக்குள் உலா வருகின்றன. சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதியில் 6-க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டு இருந்தன. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு அச்சத்துடன் இருந்து வருகின்றனா்.

காட்டு மாடுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மனித உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடா்கதையாக உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை அந்தந்தப் பகுதியிலிருந்து மட்டும் விரட்டிவிடுவதாகவும், அவற்றை வனப் பகுதிகளுக்கு விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபடுவதில்லை என்றும் இதனால்தான் வன விலங்குகள் தொடா்ந்து குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வருவதாகவும் புகாா் எழுந்தது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

கொடைக்கானல் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகளால் பல விதமான பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது வரை வனத் துறையினா் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே அதிகரித்து வரும் காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.