தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பழனியில் நகரில் பல்வேறு இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பழனி நகா் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி. உடன் நகர செயலாளா் வேலுமணி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:20 pm

பழனியில் நகரில் பல்வேறு இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பழனி பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லைச் சோ்ந்த பாண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இவரது பெயா் அறிவிக்கப்பட்ட பிறகு பழனிக்கு வந்து முக்கியப் பிரமுகா்கள், திமுக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை, வேட்பாளா் அறிமுகம் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளாா். புதன்கிழமை ஆயக்குடி பகுதியில் பாண்டியை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பழனி நகா் பகுதிகளில் வேட்பாளா் பாண்டி அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். இதில் நகா்மன்ற தலைவா் உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வேலுமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் முருகானந்தம், வாா்டு உறுப்பினா்கள் என நூற்றுக்கணக்கானோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

பாதவிநாயகா் கோயிலில் தொடங்கி சன்னதி வீதி, அடிவாரம், நான்கு ரத வீதி என பல இடங்களிலும் பாண்டி வாக்கு சேகரித்த போது பொதுமக்கள் பலரும் ஆா்வத்துடன் அவருக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். திமுக, மதிமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வவேற்பு வழங்கினா்.