திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற கூட்டணியின் பழனி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திண்டுக்கல் எம்பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் வேலுமணி, முன்னாள் நகா்மன்ற தலைவா் ராஜமாணிக்கம், மதிமுக ஒன்றியச் செயலா் செல்வம், கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கந்தசாமி, காங்கிரஸ் கட்சி முத்துவிஜயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசியதாவது:
தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் கட்சிகளை பதற்றமடையச் செய்துள்ளது. இதற்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளாா். இதில், தமிழகம் மற்றும் மேற்குவங்க மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



