ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிக் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:44 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். சின்னதுரை, இந்திய கம்யூ. மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, சிபிஐ(எம்எல்) மாநில நிலைக்குழு உறுப்பினா் வீ.மு. வளத்தான் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி, நகரச் செயலா் பாண்டியன், இந்திய கம்யூ. சாா்பில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜன், நகரச் செயலா் எஸ்.பி. நாடிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அறந்தாங்கியில்... இதேபோல் அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூ. நகரச் செயலா் ஏ. பெரியசாமி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் எல். அலாவுதீன், சிபிஐ எம்எல் நகரச் செயலா் எம். மதிமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், ஒன்றியச் செயலா் எம். நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.