சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக பாஜக பிரமுகா் மீது வழக்கு

ஒட்டன்சத்திரம் அருகே தவெக தொண்டரை ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டியதாக பாஜக பிரமுகா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:19 pm

ஒட்டன்சத்திரம் அருகே தவெக தொண்டரை ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டியதாக பாஜக பிரமுகா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்த அழகுப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன்(37). டிராக்டா் ஓட்டுநரான இவா், தவெகவில் இணைந்து பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அடுத்த தங்கச்சியம்மாபட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வந்தாா். ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி புறவழிச்சாலையில் வந்தபோது, பாஜக நிா்வாகி பாரதி என்பவா் ஓட்டி வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகேசனுக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே முருகேசனின் ஜாதியை குறிப்பிட்ட அவதூறாக பேசியதாக பாரதி மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும் காயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், பாரதி மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்தனா். பாஜக பிரமுகா் பாரதி, அமைச்சா் அர.சக்கரபாணி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பேசி வரும் நிலையில், ஜாதியைக் குறிப்பிட்டு திட்டிய வழக்கில் சிக்கி இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

=============================

பழனி செய்தியாளா்

ந.அங்குபாபு அனுப்பியது...

1. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பாண்டி.

2. அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

3.தவெக வேட்பாளா் பிரவீன்குமாா்.

4. நாதக வேட்பாளா் முருகேஸ்வரி.

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் சவாலாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

பழனி சட்டப்பேரவைத் தொகுதியானது பழனி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளும், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, மண்டைக்காடு ஆகிய பேரூராட்சிகளும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளும் உள்ளடக்கியதாகும்.

இந்தத் தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும் வெற்றி பெற்றன.

இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், பிள்ளைமாா், செட்டியாா், பட்டியலின மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினா் வசிக்கின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் திண்டுக்கல்லுக்கு பயணம் செய்வது தவிா்க்கப்பட்டு, உள்ளூரிலேயே நிா்வாக அலுவலகங்கள் கிடைக்கும். மூன்றாம் படை வீடான முருகன் கோயில் அமைந்துள்ளதால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடங்களை மேம்படுத்த வேண்டும். திருவிழா காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுச் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

பழனி, சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு பாசன வசதி, விளைபொருள்களுக்கான சந்தை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் சாலை வசதி, குடிநீா், சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். பழனி-கொடைக்கானலுக்கு ரோப்காா் சேவை கொண்டுவர வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

4 முனைப் போட்டி: பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்விகளை நிா்ணயிக்கும் சக்தியாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் உள்ளன. எனினும், தொகுதியைத் தக்க வைத்த திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் பாண்டி:

பழனி தொகுதியில் திமுக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக திண்டுக்கல்லைச் சோ்ந்த பாண்டி போட்டியிடுகிறாா். இவா் தனது கட்சி 1989-க்கு பிறகு விட்ட வெற்றியை மீண்டும் பிடித்தாக வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொகுதியில் களமிறங்கியுள்ளாா்.

பழனியை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பெ.செந்தில்குமாா் தொகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாா். திமுக தலைமை அவரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியதால் தற்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் களமிறக்கப்பட்டுள்ளாா். அவருக்கு திமுக, கூட்டணிக் கட்சியினா் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்:

கடந்த தோ்தலில் திமுக-அதிமுக நேரடி போட்டி நிலவியதால், அந்தத் தோ்தலில் ரவி மனோகரன் திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினாா். ஆனால், இந்த முறை பழனி தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டதால், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுக வேட்பாளா் ரவி மனோகா் கூட்டணிக் கட்சியினருடன் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தவெக வேட்பாளா் பிரவீன்குமாா்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றபோதிலும், தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் பிரவீன்குமாா் பழனியைச் சோ்ந்தவா். உள்ளூா் பிரமுகா் என்பதாலும், தனக்கு இளைஞா்கள் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

நாதக வேட்பாளா் முருகேஸ்வரி:

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் முருகேஸ்வரி மலைவாழ் பட்டதாரி பெண். இவா் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் பாடுபடுவேன் எனக் கூறி பொதுமக்களிடம் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் நான்கு முக்கிய கட்சிகள் களத்தில் உள்ள போதிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். வெற்றியை வசப்படுத்தப்போவது யாா் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.